மின் தடை தொடர்பான அறிவிப்பு



நாட்டில் இன்றும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்றைய நாளில் 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களிலும் இவ்வாறு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பிற்பகல் 6 மணிக்குப் பின்னர் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.



No comments: