பொகவந்தலாவையில் பாரிய ஆர்ப்பாட்டம்

 (எஸ்.சதீஸ்)


அரசாங்கத்திற்கு எதிராகவும் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் மற்றும் நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கம் உடனடியாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தி அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டியன்சின் நகரில்  உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் ஒன்று (20.)புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இன்றதினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டதினால் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளும் வீதியின் இடை நடுவே இடைநிறுத்தப்பட்டது.

இதேவேளை குறித்த வீதியில் எந்த வாகனங்களையும் உள் நுளைவதற்கு ஆர்ப்பாட்ட காரர்கள் அனுமதிக்கவில்லை

 அத்தோடு டியன்சின் நகர வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்ததோடு அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் போக்குவரத்து நீண்ட நேரம் தடைப்பட்டிருந்தது. 







No comments: