அனைத்து உதவிகளையும் வழங்குவதாக சீனத் தூதுவர் உறுதிஇலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக சீனத் தூதுவர் உறுதியளித்துள்ளார்.

வௌிவிவகார அமைச்சர்​ பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் உடனான சந்திப்பின் போது கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, 5000 மெட்ரிக் தொன் அரிசி ( முன்னதாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட 2000 மெட்ரிக் தொன் உட்பட) RMB 200 மில்லியன் பெறுமதியான மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இலங்கைக்கு வழங்க சீனா உறுதியளித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கைக்கான சீனத் தூதுவரை இன்று (21) வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார்.

கொழும்பு மற்றும் பெய்ஜிங்கில் உள்ள சீனத் தூதரகங்கள் இலங்கையின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சீனத் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.

தூதுவர் மேலும் கூறியதாவது, சீன அரசின் நேரடி ஆதரவு, சீன செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆதரவு உட்பட சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க சீன அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.

Post a Comment

0 Comments