ஆலையடிவேம்பில் 54 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளை

(கனகராசா சரவணன்)



அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வீடு ஒன்றின் கதவை உடைத்து இங்கிருந்த 3 தாலிக்கொடிகள் உட்பட 54 தங்க ஆபரணங்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பம் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

ஆலையடிவேம்பு பிரதான வீதி டயக்கோணியா முன்பள்ளி பாடசாலைக்கு அருகாமையிலுள்ள குறித்த வீட்டின் உரிமையாளரின் பேரக் குழந்தையின் பிறந்தநாள் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ள நிலையில் உறவினர்கள் சென்று தங்கியிருந்து பிறந்த நாள் கொண்டாடுவதற்காக வீட்டை அலங்காரம் மற்றும் பிறந்தநாள் கேக் செய்யும் நடவடிக்கையில் சம்பவதினமான நேற்று இரவு ஈடுபட்டுவிட்டு நள்ளிரவு 1 மணிக்கு உறவினர்கள் தமது தாலிக்கொடி மற்றும் தங்க ஆபரணங்களை களற்றி அறையின் அலுமாரியில் வைத்து பூட்டிவிட்டு அருகிலுள்ள அறையில் எல்லோரும் நித்திரைக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணிக்கு பின்னர் பூட்டியிருந்த குறித்த வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள்; அங்கு நித்தரையில் இருந்தவர்களது அறையின் கதவை பூட்டிவிட்டு அங்கிருந்த அடுத்த அறையின் அலூமாரியில் இருந்த 3 தாலிக் கொடிகள் உட்பட 54 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அதிகாலை 6 மணிக்கு நித்திரையில் இருந்து எழும்பியபோது தங்;க ஆபரணங்கள் கொள்ளைபேயுள்ளது தெரிய வந்ததையடுத்து பொலிசாருக்கு தெரியப்படுத்தினர் இதனையடுத்து அம்பாரையில் இருந்து தடவியல் பிரிவு பொலிசாரை வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று மற்றும் கோளாவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: