மட்டு கொக்குவில் பகுதியில் பணுத்துடன் இருந்த 5 உண்டியல்கள் கொள்ளை
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்கேணி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 5 உண்டியல்களை திருடி எடுத்துக் கொண்டு அருகிலுள்ள வெற்றுகாணியில் வைத்து அதனை உடைத்து அதில் இருந்த சுமார் 95 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் நேற்று வியாழக்கிழமை (14) இரவு இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.
நாவற்கேணி புதியஎல்லை வீதி 4ம் குறுக்கு வீதியிலுள்ள குறித்த வீட்டின் குடும்பத்தினர் ஆளுக்கு ஒரு உண்டியல் வீதம் 5 உண்டியல்களில் தினமும் நூறுரூபா வீதம் சுமார் 95 ஆயிரம் ரூபா வரை சேமித்து வந்துள்ள நிலையில் சம்பவதினமான நேற்று இரவு 8.30 மணிக்கு அனைவரும் நித்திரைக்கு சென்ற நிலையில் இரவு 11 மணிக்கு தண்ணீர் குடிப்பதற்காக வீட்டின் உரிமையாளர் நித்திரையில் இருந்து எழுந்து சமையல் அறைக்கு சென்ற போது அங்கிருந்த ஜன்னல் உடைக்கப்பட்டு வீட்டின் மண்டபத்தில் தொலைக் காட்சி பெட்டிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த 5 உண்டியல் திருட்டுப் போயுள்ளது தெரியவந்தது.
அதனையடுத்து பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து திருட்டுப்போன வீட்டிற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில் 3 உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் வெறும் உண்டியல்களை பொலிசார் மீட்டதுடன் ஏனைய இரு உண்டியல்களை பணத்துடன் கொள்ளையிட் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்;பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .

No comments: