148 மலையக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை இன்று ஸ்தம்பிதம்

 எஸ் சதீஸ்

அரசாங்கத்திற்கு எதிராகவும் தூரபிரதேசங்களுக்கு செல்லும் சேவைக்காக செல்லும் அதிபர் ஆசிரியர்களை அருகாமையில் உள்ள பாடசாலைகளில் சேவையில் ஈடுபடுத்துமாறும் நாட்டில் அதிகரித்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் 
எரிபொருள் தட்டுப்பாடு எரிபொருளுக்கான விலையேற்றம் ஆகிய ஆற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து.மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள அதிபர் ஆசியர்கள் 25.04.2022. திங்கள் கிழமை சுகயின விடுமுறை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் இன்றய தினம் ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட 148பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை ஸ்தம்மிதம் அடைந்துள்ள நிலையில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்றைய தினம் பாடசாலைக்கு சமுகம் தரவில்லை .

இதேவேளை மாணவர்களின் வருகை பாடசாலைகளுக்கு குறைவாக கானப்பாட்டாலும் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் திரும்பி சென்றதை அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments: