அம்பாறை மாவட்டத்தின் தைப்பொங்கல் நிகழ்வு கல்முனையில்ஏ.எல்.எம்.ஷினாஸ்

அம்பாறை மாவட்டத்தின் பிரதான தைப்பொங்கல் நிகழ்வு கல்முனை தமிழ் இளைஞர் சேனை அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை பழைய பஸ் நிலையத்திற்கு முன்னால் நடைபெற்றது.

இதில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எம்.ஏ.டக்ளஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொங்கல் பானையில் புத்தரிசிட்டு பொங்கல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

தமிழர் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டதுடன்; மாணவர்களின் நடனமும் இடம்பெற்றது.

நிகழ்வின்போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ் இளைஞர் சேனை அமைப்பினால் வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், பிரிகேடியர் அபயகோன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.எல்.புத்திக்க, கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.றபீக், 18வது பிரிவு கட்டளையிடும் இராணுவ அதிகாரி, மேஜர் சிறிசேன உட்பட பலர் கலந்து கொண்டனர்

அம்பாறை மாவட்டத்தின் புதிய மாவட்ட அரசாங்க அதிபர் கல்முனையில் தனது முதல் நிகழ்வில் கலந்து கொண்டதையிட்டு தமிழ் இளைஞர்களால் முடி சூடப்பட்டு பொன்னாடை போர்த்தி மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments