மக்களிடையே அதிகரிக்கும் விறகுப்புழக்கம் (திருக்கோவில்)

news


கடந்த சில மாதங்களாக மக்களிடையே விறகுப்புழக்கம் மிக அதிகரித்துள்ளதாக பிரதேச வாரியான செய்திகள் குறிப்பிடுகின்றன.

சில மாதங்களாக எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதியப்பட்டதை தொடர்ந்து இந் நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் எரிவாயு புழக்கம் மக்களிடம் காணப்படும் நிலையில் விறகடுப்பு புழக்கம் மக்களிடையில் முன்பை விட அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் இன்ற அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச விறகு வியாபாரி ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு எமக்கு கிடைத்தது.


இதன்போது குறித்த விறகு வியாபாரி கூறுகையில்

முன்பு விறகு வியாபாரம் மிகவும் குறைந்தளவு காணப்பட்டது மக்கள் விறகினை (கொள்ளி) வேண்டுவது மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

ஆனால் தற்போது விறகினை மக்கள் அதிளவு கொள்வனவு செய்வதாகவும் விறகு வியாபாரத்தை நம்பி தனது பொருளாதாரத்தினை மேம்படுத்த தான் முயற்சித்த வேளை மக்களிடையே விறகுக்கான கேள்வி அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் எமக்கு தெரவித்தார்.

Photos taken in connection with firewood in the Divisional Secretary's area in Tirukovil today
Post a Comment

0 Comments