களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை

 


எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ள களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு எரிபொருளை வழங்குவதற்கு கனியவள கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான டீசல் பற்றாக்குறை காரணமாக அந்த மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு பிரிவின் செயற்பாடுகள் நேற்று பாதிப்படைந்திருந்தன.

அதன்படி, நேற்று  (19) முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நாளாந்தம் 1,000 மெற்றிக் டன் எரிபொருள் வழங்க தீர்மானித்துள்ளதாக கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க  தெரிவித்தார்.


No comments: