தன்னை தானே குத்தி தற்கொலை செய்து கொண்ட திருடன் ராகமையில் சம்பவம்
ராகம பல்பொருள் அங்காடியொன்றில் சோப்-வாசனை திரவியங்கள் போன்றவற்றை திருடிய நபர் பொதுமக்கள் சிலரால் தாக்கப்பட்டதை தொடர்ந்து தன்னிடமிருந்த கத்தியால் தன்னை குத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ராகம எல்தெனிய பகுதியில் பல்பொருள் அங்காடியில் திருடப்பட்ட பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்களுடன் நபர் ஒருவர் வெளியேறியுள்ளார்.
அவரிடமிருந்த பொருட்கள் முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் விழுந்துள்ளன.
இதனை தொடர்ந்து முச்சக்கரவண்டி சாரதிக்கும் அந்த நபருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் அந்த நபர் முச்சக்கரவண்டி சாரதியை கத்தியால் தாக்கியுள்ளார்,அதன் பின்னர் பல்பொருள் அங்காடிக்கு அருகில் வைத்து பொதுமக்கள் அந்த நபரை தாக்கியுள்ளனர்.
பொதுமக்கள் தன்னை தாக்கினால் கத்தியால் குத்திதற்கொலை செய்துவிடுவேன் என மிரட்டிய நபர் பின்னர் தன்னை கத்தியால் குத்தியுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பல மருத்துவமனைகள் காணப்பட்ட போதிலும் எவரும் அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயலவில்லை .
தன்னை கத்தியால் குத்தி தற்கொலை செய்துகொண்டவர் கடந்த மாதம் ராகம வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய நோயாளி என தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments: