புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசேட அறிவிப்பு


ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை குறித்த மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன்,  கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை குறித்த மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்தவும் எதிர்வரும்  பெப்ரவரி முதலாம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments