கோமாரி பிரதேசத்தை சேர்ந்த காணாமல் போன நபரை கண்டுபிடிக்க உதவி கோரும் குடும்பத்தினர்


கல்முனை ஆதார வைத்திய சாலையில் வைத்திய சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ருந்த நிலையில் காணாமல் போயுள்ள இளைஞர்  தொடர்பில் நேற்று (02) கல்முனை பொலிஸ் நிலையத்தில் வைத்தியசாலை நிர்வாகத்தினால்  முறைப்பாடு பதிவு  செய்யப்பட்டுள்ளாக குறித்த இளைஞரின் உறவினர்கள் தெரிவித்தனர்

அம்பாறை கோமாரி  களுகொல்லை பகுதியைச் சேர்ந்த தர்மதாச தர்மசீலன் என்ற  குறித்த இளைஞன் கடந்த 2022.01.01ம் திகதி மருத்துவ தேவைகளுக்காக உறவினர்களால் கல்முனை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட் நிலையில் 02ம் திகதி மாலை 09 மணியளவில் காணமால் போயுள்ளார்.

பின்னர் இன்று (03) காலை மீண்டும் வைத்திய சாலைக்கு குறித்த இளைஞன் வந்த நிலையில் மீண்டும் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் தெடர்பில் தகவல் தெரிந்தவர்கள் கீழுள்ள இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

நண்பர்கள் தர்ஷன் 0753435827
 
றேகன் 0770291699

நிஷாந்தன் 0778712711

பச்சை கலர் ரீசேட் ஜம்பர் அனிந்திருக்கிறார்.



No comments: