மட்டக்களப்பில் 1300 பேருக்கு ஒமிக்கிரோன் 6 பேர் உயிரிழப்பு

(கனகராசா சரவணன்)மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓமிக்குரோன் வைரஸ் என சந்தேகிக்கப்படும் வைரஸ் நோயயினால் 40 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 1300 பேருக்கு நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கடந்த ஒருவாரத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. சுகுணன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டம் இன்று வியாழக்கிழமை (27) மாவட்ட செயலகத்தில் செயலணியின் தலைவரும் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது இதில் கலந்துகொண்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. சுகுணன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.


 
திடிரென எமது நாடு உட்பட உலகம் பூராக ஒமிக்ரோன் கொரோனா வைரஸ்சின் தாக்கத்தினால் மிக அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த விதத்தில் மேற்கு மாகாணமான கொழும்பு கம்பஹா தவிர்ந்து கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று 100 மேற்பட்ட நோயாளிகளும் 20 க்கு மேற்பட்ட கர்ப்பிணிதாய்மார்களும் இந்த நோய்தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மாவட்டத்தில் 40 க்கு அதிகமான கர்ப்பிணி தாய்மர்கள் ஒமிக்கிரோன் என சந்தேகிக்கப்படும் வைரஸ் தாக்கத்தினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 3 தினங்களில் 500 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து 1300 பேருக்கு நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இன்று 22 யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து இரண்டு யுவதிகள் உட்பட 6 பேர் கடந்த ஒருவாரத்தில் உயிரிழந்துள்ளனர்.

கடந்த முறை டெல்டா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை வைத்து பராமரிப்பதற்கு சிரமப்பட்டிருந்தோம். ஆனால் இந்த முறை வந்திருக்கின்ற ஒமிக்கிரோன் வைரஸ் ஆனது மிக அதிகளவானவர்களை மிக குறுகிய காலத்தில் நோயினால் பாதிப்படைய செய்து கொண்டிருக்கின்றது இந்த தாக்கம் ஏற்பட்டதையடுத்து எங்களுக்கு எதிர்காலத்தை நோக்கிய நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளதுடன் இந்த நோய்தாக்கம் எம்மை திக்கு முக்காடவைத்துள்ளது ஏன் என்றால் வைத்தியசாலைகளில் வைத்து பராமரிப்பதற்கான போதிய இடங்கள் இல்லை.

ஆகவே பொதுமக்கள் இந்த ஒரு அபாயத்தை உணர்ந்தவர்களாக ஒவ்வொரு; நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

இன்று இலங்கையில் இருக்கின்ற இந்த பொருளாதார சீரிழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற இந்த நிலமை கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்ட இந்த நிலமையை மேலும் அதிகரிக்கின்ற விதமாக எமது நடவடிக்கைகளை செய்ய முடியாது எனவே தேவையற்ற விதத்தில் கூட்டம் கூடுதலை நிறுத்தவேண்டும்.

பிறந்தநாள் வைபவங்கள் மற்றும் வேறு சமூக வைபவங்களுக்காக ஒன்று கூடுவதை நிச்சயமாக தவிர்த்துக் கொள்ளவேண்டும் அதேவேளை ஒன்று கூடுவதற்கு சுகாதார அதிகாரிகளின் அனுமதியை பெறவேண்டும்.

இது தொடர்பாக மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள், பொலிஸ் நிலையங்கள், அனுமதி வழங்குதல் மற்றும் சட்ட நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாட உள்ளோம்.

எனவே மக்கள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளவேண்டும். முககவசம் அணிவது என்பது மிக மிக முக்கியமானது சமூக இடைவெளி என்கின்ற ஒரு மீற்றர் இடைவெளி மற்றும்; கைசுகாதாரம் பேனவேண்டும்.

இந்த வைரஸ்சை நோயை உலகத்தில் இருந்து இல்லாமல் ஒழிப்பதற்கு தான் இந்த தடுப்பூசி வழங்கப்படுகின்றது இந்த தடுப்பூசி மூலம் கடந்த காலத்தில் பலபல தொற்று நோய்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது

எனவே இந்த கொரோனா தொற்றை இந்த உலகத்தை விட்டு இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்றால் இந்த தடுப்பூசி அதற்குள்ள விதத்தில் ஏற்றிக் கொள்ளவேண்டும்.

எமது நாட்டை பெறுத்தமட்டில் 12 வயது தொடக்கம் 15 வயதான மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஒரு டோஸ் ஏற்றப்படுகின்றது, 16 வயதில் இருந்து 19 வயது மாணவர்களுக்கு 2 டோஸ் 3 மாதகால இடைவெளியில் ஏற்றப்படுகின்றது.

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3 வது தடுப்பூசியான பூஸ்சர் ஊசி ஏற்ற அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவே நோய்வாய்ப்பட்டவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கர்ப்பிணிதாய்மார்கள், முக்கியமாக இந்த தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றில் இருந்து பதிய கட்டுப்பாடுகள் புதிய விதிமுறைகள்; புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அதில் அரசியல்வாதிகள் உயர்அதிகாரிகள் என உயர்வு தாழ்வு பார்க்காது சட்டம் அனைவருக்கும் சமம் என்ற விதத்தில்தான் சுகாதார நடவடிக்கை எடுக்கப்படும. எனவே அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பவர்களுக்கு சட்டநடவடிக்கை எடுக்கப்படும்

முதலாவது அலையின் போது கொரோனா வைரசின் அல்பா திரிவு வைரஸ்தான் எங்களை தாக்கியிருந்தது இரண்டாவது அலையின் போது பீற்றா காமா எனப்படுகின்ற தாக்கியிருந்தது மூன்றாவதாக அலையில் அதிகளவு உயிர்சேதத்தையும் அதிகளவு தொற்றையும் ஏற்படுத்தியிருந்தது டெல்டா மிகவும் ஒரு அபாயமான வைரசாக கணிக்கப்பட்டிருந்தது

ஆனால் இப்பொழுது உலகத்தில் 99 வீதமான கொவிட் 19 க்கு காரணமாக இந்த ஒமிக்குரோன் வைரஸ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது ஆகவே மட்டக்களப்பில் இருந்து மாதிரிகளை அனுப்பியுள்ளோம் இருந்தாலும் இங்கு காணப்படுகின்ற அனைவருமே ஒமிக்கிரோன் பிறவு வைரசால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கின்றோம் அது விரைவில் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படும் என்றார்.

No comments: