ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 01 கொவிட் மரணம் பதிவு

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஒரு கொவிட் மரணம் நிகழ்ந்துள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி எஸ். அகிலன் குறிப்பிட்டார்.

குறித்த நபர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தொற்றாளராக இனங்காணப்பட்டு வெலிக்கந்தை கொரோனா தொற்று மேலதிக சிகிச்சை நிலையத்திற்கு சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

இந் நிலையில் குறித்த நபர் இன்று உயிரிழந்துள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

மேலும் இன்று புதிய தொற்றாளர்களாக இருவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் (14)

No comments: