மட்டு உப்போடை பகுதி ஆற்றில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு உப்போடை ஆற்றில் உருக்குலைந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு மோகோந்திரன் வீதியைச் சேர்ந்த 37 வயதுடைய தோமஸ் காந்தமூர்த்தி செந்தூரன் என அவரது மனைவியினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.குறித்த நபர் கடந்த 20 ம் திகதி திங்கட்கிழமை கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில் ஒருவர் குதித்து தற்கொலை செய்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் அப்பகுதியில் தேடினர்.

இந்த நிலையில்அன்றைய தினம் காந்தமூர்த்தி செந்தூரன் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல் போயுள்ளார் அவரை அவரது மனைவி உறவினர் தேடிவந்த நிலையில் நேற்று உப்போடை பகுதி ஆற்றில் கரையொதிங்கிய சடலத்தை அவரது மனைவி பார்த்து அது தனது கணவர் என அடையாளம் காட்டியுள்ளனர்.

இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: