மலையகத்தில் இருவேறு இடங்களில் சிலின்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவு



எஸ்.சதீஸ்

மலையகத்தில் இருவேறு இடங்களில் இரண்டு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய, ஹட்டன்- ஹிஜிராபுர பகுதியில் நேற்று (21) இரவு சுமார் 8.10
மணியளவில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்து சிதறியுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும் அடுப்பு
முற்றாக சேதமடைந்துள்ளது.

குறித்த லிட்ரோ எரிவாயு சிலிண்டர், 16 நாட்களுக்கு கொள்வனவு
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதே வேளை டயகம வெஸ்ட்- நட்போன்  தோட்டத்தில் தனி குடியிருப்பு ஒன்றில்
நேற்று (21)  காலை எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று
பதிவாகியுள்ளதாக  டயகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments: