2022 ல் சீனாவுக்கும் உலகநாடுகளுக்கும் இடையே யுத்தம் ஏற்படும் மட்டு பரபல ஜோதிடர் - கணிப்பு

 (கனகராசா சரவணன்)



எதிர்வரும் 2022 மார்ச் மாதம் நடைபெறும் ராகு கேது மாற்றமும், ஏப்ரல் மாதம் மாதம் நிகழ இருக்கும் குருமாற்றம் ஆகிய இரண்டு மாற்றங்களும் உலகத்துக்கே ஒன்றரை ஆண்டுகள் மிகவும் உலக சுகத்துக்கே சவால் விடும் வண்ணம் உள்ளது. அதேவேளை உலகநாட்டுகளுக்கும் சீனாவுக்கும் யுத்தமாக இருக்கலாம் அது மட்டுமின்றி இயற்கை அழிவுகளும், முக்கிய தலைவர்கள் மாற்றங்களும் எதிர்பாராமல் நடைபெற வாய்ப்புண்டு உலக இயற்கை சீற்றங்களால் ஆபத்துக்கள் இருக்கும் என பிரபல ஜோதிடரும் மட்டு அம்பளாந்துறை சித்தி விநாயகர் ஆலைய பிரதமகுருவான விநாயகமூர்த்தி குருக்கள் கணிப்பு

மட்டக்களப்பு அம்பளாந்துறை சித்தி விநாயகர் ஆலைய பிரதமகுருவும் மஹா காகபுஜண்ட சோதிட நிலைய சோதிடருமான விநாயகமூர்த்தி குருக்கள் இன்று புதன்கிழமை (29) எதிர்வு கூறியுள்ளார்.

மனிதன் ஏதாவது ஒன்று நடந்தால் தான் நம்பிக்கையே வரும். அந்தவகையில் எதையும் நம்பமாட்டார்கள் அது சரி அதுபோல் இந்தப்பதிவில் கூறுவதையும் அப்படியே நம்புங்கள். உலகநாடுகள் என்றால் இப்போது உலக நாட்டுகளுக்கெல்லாம் தலைமைத்துவ நாடாக அமேரிக்கா விளங்குகின்றது. அந்த பதவியை எடுக்கவேண்டும் என்று சீனா கங்கணம் கட்டிக்கொண்டு செயற்ப்பட்டு பெரும் யுத்த வியூகம் அமைக்கின்றது. என்று அனைத்து நாடுகளும் ஊடகச்செய்தி பரப்புகின்றது யாவரும் அறிவோம்.


தற்போது தலைமைத்துவ நாடும். தலைமைத்துவமாக வர நினைத்து எதிர்பாத்து வியூகம் அமைக்கும் சீனாவுக்கும் இடையில் போட்டி நடுநாயகமாக மத்தியஸ்தம் செய்ய வருகிறார்கள்.


2022 மார்ச் மாதம் நடைபெறும் ராகு கேது மாற்றமும் , 2022 ஏப்ரல் மாதம் மாதம் நிகழ இருக்கும் குருமாற்றமும் ஆகிய இரண்டு மாற்றங்களும் பொதுவாக உலகத்துக்கே ஒன்றரை ஆண்டுகள் மிகவும் உலக சுகத்துக்கே சவால் விடும் வண்ணம் உள்ளது. இதற்கு எதிர்மாறாக சீனாவுக்கும் இப்பலன் உண்டு. ஒன்று உலகநாட்டுக்கும் சீனாவுக்கும் யுத்தமாக இருக்கலாம் அல்லது உலகநாட்டில் இருந்து சீனா தனிமைப்படும் காலமாக இருக்கும்.


அது மட்டுமின்றி இயற்கை அழிவுகளும் இருக்கலாம் மற்றும் முக்கிய தலைவர்கள் மாற்றங்களும் எதிர்பாராமல் நடைபெற வாய்ப்புண்டு. இக்கால கட்டங்களில் உலக இயற்கை சீற்றங்களால் ஆபத்துக்களாக இருக்கலாம், ஆனால் உலகநாடுகள் தற்போது தங்கள் தங்கள் ஆயுதப் போட்டியை ஒருதரம் பரீட்சித்துப்பாத்தால் நல்லதென யோசிக்கிறார்கள் அப்படி பயிற்சிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டால். இயற்கைக்கு சாதகமாக அமையலாம்.


இவர்கள் நிறுத்தினாலும் இயற்கை நிறுத்துவதற்கு சற்று யோசிக்கும். யாருக்காக யுத்தம் மக்களுக்காகவா? யுத்தத்துக்காகவா? யுத்தம் எந்த நாட்டு மக்கள் யுத்தம் கட்டாயம் செய்யுங்கள் என்று கூறியது அப்படி பதிவுகள் உண்டா. இக்கிரக மாற்றத்தினால் உலகநாட்டில் நேர்மை தர்மம் கடவுள் நம்பிக்கை இல்லாத பல நாட்டுத் தலைவர்களுக்கு எதிர்பாராதா மாற்றங்கள் வரலாம். மக்கள் சேவையில் இருந்து ஒதுக்கப்படுவார்கள்.


அது மட்டும் இல்லை உலக பொருளாதாரம் பற்றி சிந்திக்க வைக்கும். உலக யுத்தமா இயற்கை ,அழிவா எது வந்தாலும் வரட்டும். அணுவாயிதத்தை கைவிடமாட்டோம் என்கிறது உலகம் எதுவாயினும் நடக்கட்டும் பார்ப்போம். எதுவும் நடைபெறாவண்ணம் இறைவனை பிரார்த்திப்போம். யாரையும் குற்றம் சொல்ல முடியாது. இயற்கை தான் தப்பித்து கொள்ள எம்மீது பழிபோட திட்டமிடுகிறது இதற்கு சாதகமாக நாம் இருக்கக்கூடாது. நல்லது நடக்கட்டும் இறைவா.என அவர் கணித்து கூறினார்

No comments: