அபாய வலையத்தை நோக்கி பயணிக்கின்றதா திருக்கோவில் பிரதேசம் ?


அம்பாறை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வலையத்தில் உள்ள திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கீழுள்ள பிரதேசங்களில் இதுவரை 62 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதைக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ப.மோகனகாந்தன் குறிப்பிட்டார்.

இன்றைய தினம் 06 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இவர்களுள் 03 ஆண்களும் 03 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருக்கோவில் காயத்திரி கிராமத்தில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருதுடன் இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் அக்கரைப்பற்று மற்றும் பாலமுனை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்தக்கது. No comments: