சட்டவிரோதமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர். கைது. 40ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு மீட்பு.

எஸ்.சதீஸ்


சுயதனிமை படுத்தப்பட்டுள்ள டிக்கோயோ சாஞ்சிமலை கிழ்பிரிவு தோட்ட 06ம்
இலக்க தேயிலை மலையில் இருந்து சட்டவிரோதமாக விற்பனைக்கு
சைக்கப்பட்டடிருந்து 40ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்போடு இரண்டு சந்தேக
நபர்களை கைது செய்துள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த கைது நடவடிக்கை 07.06.2021. திங்கள் கிழமை முற்பகல் வேலையில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரவித்தனர்.

குறித்த சாஞ்சிமலை மலை பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியும்
விற்பனையும் மேற்கொண்டு வருகின்ற சம்பவம் தொடர்பில் நோர்வுட்
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட
சுற்றிவைலைப்பின் போது சாஞ்சிமலை கிழ்பிரிவு தோட்ட 06ம் இலக்க தேயிலை மலையில் கசிப்போடு இரண்டு கேன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததோடு 

இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் டிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு தோட்டபகுதியை சேர்ந்தவர்கள் என
நோர்வுட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடதக்கது

Post a Comment

0 Comments