களுவாஞ்சிகுடியில் 374 பேருக்கு தடுப்பூ சி ஏற் றப்பட்டது

செ.துஜியந்தன்


களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனையினால் சைனோபார்ம் தடுப்பூசி ஏற்றும் பணிகள் பட்டிருப்பு மகாவித்தியாலய தேசியப் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டவருகின்றன.

இன்று(09) பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என 220 பேருக்கு தடுப்பூ ஏற்றப்பட்டன. நேற்று(08) பாதுகாப்பு படையினர், பொலிஸார் என 154 பேருக்கு தடுப்பூ வழங்கப்பட்டிருந்தன.

உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி வழங்கும் முன் தடுப்பூசிபற்றிய விளக்கம் மற்றும் இதனை யார் யார் பெற்றுக்கொள்ள உடற்தகைமை கொண்டுள்ளனர் போன்ற விபரங்கள் சுகாதாரத்தரப்பினரால் வழங்கப்பட்டு அதன் பின் உரியவர்களிடம் சம்மதத்தை உறுதிப்படுத்திக்கொண்டதன் பின் பயனாளிகளுக்கு தடுப்பூசி ஏற்றப்ட்டது.

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனைக்கு 1600 சைனோபாம தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றள்ளன. இவை முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments