கல்முனைப் பிரதேசத்தில் இன்று (21) சுகாதார வழிமுறைகளை ம பின்பற்றி அத்தியாவசிய பொருட் கொள்வனவு.

(எஸ்.அஷ்ரப்கான் )


நீண்ட நாட்களுக்கு பிறகு பயணத்தடை நீக்கப்பட்ட நிலையில் இன்று (21) நாடளாவிய ரீதியில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுகாதார வழிமுறைகளை மிக இறுக்கமாக பின்பற்றி மிகவும் ஆபத்தான கட்டத்தில் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக வெழியில் செல்வதை அவதானிக்க முடிகிறது.

கல்முனைப் பிரதேசத்தில் இவ்வாறு மக்கள் மிகச் சிறப்பாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தங்களது கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுபோன்று கல்முனை பொதுச் சந்தையில் மக்களின் வரவும் மிகக்குறைவாக காணப்பட்டதுடன் வியாபாரம் சற்று மந்தமாகவே நடைபெற்று வருவதையும் அவதானிக்க முடிந்தது.

பொலிசாரும் பாதுகாப்பு படையினரும் இப்பிரதேசங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை பொது போக்குவரத்து துறையும் மிகவும் பாதிக்கப்பட்டு காணப்படுகின்றது. மக்கள் போக்குவரத்திற்காக இல்லாத நிலையிலும் வாகனங்களும் மிக அரிதாகவே பயணத்தில் ஈடுபடுகின்றது. வாகனங்களில் பயணிகள் அற்ற நிலையில் கல்முனை பஸ் தரிப்பு நிலையம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

இதேவேளை வாகனச் சாரதிகள் தங்களது போக்குவரத்துக்காக டீசல் பெற்றுக் கொள்ளுகின்ற அளவுக்குக்கூட பொருளாதார நிலை மிகவும் கஸ்டமாக இருக்கின்றது என்றும் போக்குவரத்து தொழில் மிகவும்பாதிப்படைந்துள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.


Post a Comment

0 Comments