ஊரடங்கிற்கு சமனாகும் பயணக் கட்டுப்பாடு மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் !


நேற்றையதினம் நள்ளிரவு 11 மணிமுதல் எதிர்வரும் திங்கட்கிழைமை காலை 04 மணிவரையான நேரப்பகுதி நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட கால எல்லையாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் தேசிய அடையாள அட்டையின் பிரகாரம் மக்கள் வெளிச்செல்லும் நடைமுறை அமுல் படுத்தப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.

இதேவேளை மருந்தகங்கள் தவிர்ந்த மற்றைய வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த விடையம் தொடர்பில் கருத்து தெரிவித்த இராணுவத்தளபதி பயணக் காட்டுப்பாடானது முழு ஊரடங்கிற்கு சமம் எனவே மக்கள் வெளியேறாமல் பாதுகாப்பாக வீட்டில் இருக்குமாறு தெரிவித்துள்ளார்.

மேலும் பயணக்கட்டுப்பாடு நேரத்தில் மக்களை கண்காணிக்க 20000 பாதுகாப்பு படைவீரர்கள் கணமிறக்கப் பட்டுள்ளதகவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: