மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு


வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

குறித்த அலுவலங்களில் கொரோனா தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திலும் அமுனுகம மேலும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் திங்கட்கிழமை 3 ஆம் திகதி தொடக்கம் ஒரு வாரத்திற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: