மாணிக்கல் அகழ்விற்கு சென்ற முன்று பிள்ளைகளின் தந்தை பலி(எஸ்.சதீஸ்)

மாணிக்ககல் அகழ்விற்கு சென்ற முன்று பிள்ளைகளின் தந்தை மின்சாரம்
பாய்ச்சப்பட்ட கம்பி வேலியில் சிக்குண்டு ஸ்தலத்திலே பலியானதாக
பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவை கீழ் பிரிவை சேர்ந்த 46 வயதுடைய செல்லப்பன் சங்கர் மூன்று பிள்ளைகளின் தந்தையான என்பவரே இவ்வாறு 31-06 காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் 30-05 இரவு பொகவந்தலாவை கீழ் பிரிவு பகுதியிலுள்ள மரக்கறி செய்கை
பண்ணை பகுதியில் சடவிரோதமாக மாணிக்கல் அகழ்விற்கு சென்ற போது
அப்பகுதியில் மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பி வேலியில் சிக்குண்டு

ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். பிரதேசவாசிகளினால் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார் சடவிரோத மின்சார வேலி அமைத்தவர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் அட்டன் நீதிமன்ற நீதவான் சடலத்தை பார்வையிட்ட பின் பிரேத
பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments