நடமாட்டத்தடை தொடர்ந்தும் அமுலில்


கடந்த 21ம் திகதி இரவு 11 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட பயணத்தடையானது நாளை காலை 4 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொடர்ச்சியாக 25 ம் திகதி இரவு 11 மணிக்கு பயணத்தடை மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.

அத்துடன் 29,30ம் திகதிகளில் பயணத்தடையினை  தொடர்வது  தொடர்பில் 28ம் திகதி தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

25ம் திகதி பயணத்தடை தற்காலிகமாக தளர்த்தப்பட்டாலும் தேவையற்ற விதத்தில் வீட்டை விட்டு யாரும் வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்றையதினம் 2000ற்கும் அதிகளவான தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments