தடுப்பூசி பெறுபவர்கள் பணம் செலுத்த தேவையில்லை

 


கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் நபர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிகள் கட்டணம் இன்றி பொது மக்களுக்கு வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், பணம் பெற்று செலுத்தப்படும் தடுப்பூசிகள் போலியானதாகவும் இருக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments