கொவிட் 19 தொற்றுறுதியான அதிகளவானோர் கொழும்பில் !

 


நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 2,909 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 556 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் நாரஹேன்பிட்டி பகுதியை சேர்ந்த 127 பேரும், பாதுக்கை பகுதியை சேர்ந்த 81 பேரும் ஹோமாகம பகுதியை சேர்ந்த 40 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கம்ஹாவில் 354 பேருக்கும், களுத்துறையில் 407 பேருக்கும், கண்டியில் 157 பேருக்கும் குருநாகலில் 207 பேருக்கும், காலியில் 233 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 75 பேருக்கும், கேகாலையில் 120 பேருக்கும் மாத்தறையில் 133 பேருக்கும், நுவரெலியாவில் 80 பேருக்கும் நேற்று தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் இரத்தினப்புரியில் 53 பேருக்கும், பதுளையில் 60 பேருக்கும், திருகோணமலையில் 99 பேருக்கும், மாத்தளையில் 47 பேருக்கும், கிளிநொச்சியில் 46 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 161, 242 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் ஒரு லட்சத்து 26, 995 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், 33, 115 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

0 Comments