கிழக்கில் கூடுதலான பகுதிகள் 17 முதல் திமைப்படுத்தலில் !


நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில்

கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு சி பிரிவிலுள்ள நெசவு நிலைய வீதி, வேலாப்பொடி வீதி, கண்ணகி அம்மன் ஆலயவீதியும், கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு பி பிரிவிலுள்ள லேக்றோட் வீதி, விதானையார் வீதி, அப்புகாமி வீதிகள் முதலான பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் 

கிண்ணியா காவல்துறை அதிகார பிரிவில், கிண்ணியா, பெரியகிண்ணியா, குட்டிக்கராச்சி, அல்தர் நகர், பெரியாத்துமனை, மலிந்தூர், ரஹுமானியான் நகர், சின்னகிண்ணியா, மண்வெளி, கட்டையாறு,  குறிஞ்சான்கேணி, முனைச்சேனை முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குருநாகல் மாவட்டத்தில்,

கிரிவுள்ள காவல்துறை அதிகாரி பிரிவின் ஹமன்கல்ல, நாரங்கொட வடக்கு, நாரங்கொட தெற்கு, பட்டபொதெல்ல, மல்கமுவ, தொடங்பொத்த மற்றும் நாரங்கமுவ முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments