மட்டக்களப்பில் ஆடை தொழிற்சாலையில் 157 தொற்றாளர்கள் மூடப்படும் தொழிற்சாலை


மட்டக்களப்பு  மாவட்டத்தில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில்கடந்த 14 நாட்களாக மேற்ககொள்ளப்பட்ட கொவிட் 19 பரிசோதனைகளின் போது 157 கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த ஆடைத் தொழிற்சாலை எதிர்வரும் 06ம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாகவும்  மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் குறிப்பிட்டார்.அந்த வகையில்..

வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 49

பட்டிப்பளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22

மட்டடக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 

ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18

கிரான், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா 14

களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா  9

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03

கடந்த 24 மணித்தியாலத்தில் 

மட்டக்களப்பு மாவட்டத்தில்   123 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுள்ளதுமுடன் இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  2397 தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன்     26 மரணம் நிகழ்ந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments