இன்றைய ஐபிஎல் போட்டி - பஞ்சாப் கிங்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஐபிஎல் போட்டியின் 26 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று மோதுகின்றன. இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், பஞ்சாப் 2 வெற்றிகளும், பெங்களூர் 5 வெற்றிகளும் பெற்றுள்ளன.
பஞ்சாபைப் பொருத்தவரை, முந்தைய ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி கண்டுள்ளது. தற்போது நல்லதொரு ஃபார்மில் இருக்கும் பெங்களூரை இந்த ஆட்டத்தில் சந்திப்பது பஞ்சாபுக்கு சவாலாகவே இருக்கும். பஞ்சாபை பொருத்தவரை, கேப்டன் கே.எல்.ராகுல் நன்றாக விளையாடினாலும் மயாங்க் அகர்வால் அந்தளவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.
மோசமாக விளையாடும் நிகோலஸ் பூரனுக்கு பதிலாக டி20யில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்கும் டேவிட் மலானை ஏன் பஞ்சாப் இன்னும் களமிறக்காமல் இருக்கிறது என தெரியவில்லை.
மேலும் அந்த அணிக்கு இறுதியாக பேட்டிங்கில் இருக்கும் மற்றொரு ஆறுதல் ஷாருக்கான். இவரை தன்னுடைய கடைசி நேர அதிரடியில் பஞ்சாபுக்கு ரன்களை சற்று ஏற்றுகிறார். பவுலிங்கில் முகமது ஷமியை பெரிதும் நம்பி களமிறங்குகிறது பஞ்சாப்.
பெங்களூரைப் பொருத்தவரை, பேட்டிங், பவுலிங் என எல்லா விதத்திலும் சிறப்பாகச் செயல்படுகிறது. நடப்பு சீசனில் இதுவரை ஒரேயொரு தோல்வியை மட்டும் சந்தித்து கோப்பைக் கனவுடன் முனைப்பு காட்டுகிறது. டி வில்லியர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் தொடர்கிறார். கோலி சற்று சறுக்கினாலும், தேவ்தத் படிக்கல், மேக்ஸ்வெல் ஆகியோர் ரன்கள் சேர்க்கின்றனர். கடந்த ஆட்டத்தில் ரஜத் பட்டிதாரும் சிறப்பாக செயல்பட்டார்.

No comments: