சிராஜ் மீது கோபமான கோலி |முகம் சுழித்த ஏனைய வீரர்கள்


நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இளம் வீரர் சிராஜ் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார்.

ஐபிஎல் தொடரின் தொடக்க காலங்களில் கடுமையாக விமர்சனங்களை சந்தித்த இளம் வீரர்தான் முகமது சிராஜ். முக்கியமாக இவர் அதிக ரன்களை வாரி வழங்கியதால் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டார். பெங்களூர் அணியின் தோல்விக்கு பல முறை காரணமாக இருந்தார்

கடந்த சீசன் ஐபிஎல் போட்டியில் கூட சிராஜ் அதிக அளவு ரன்களை வாரி வழங்கினார். பல போட்டிகளில் கேப்டன் கோலியே சிராஜ் மீது கோபம் அடைந்தார்.

கடந்த சீசன் ஐபிஎல் போட்டியில் கூட சிராஜ் அதிக அளவு ரன்களை வாரி வழங்கினார். பல போட்டிகளில் கேப்டன் கோலியே சிராஜ் மீது கோபம் அடைந்தார்.

ஒரே மாதத்தில் மோசமான வீரர் என்ற பெயரில் இருந்து சிராஜ் நம்பிக்கை நட்சத்திரம் என்ற உயரத்திற்கு சென்றார். ஆனால் அப்போதும் கூட இவர் டெஸ்ட் வீரர், ஐபிஎல்லில் மீண்டும் சொதப்புவார் பாருங்கள் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் 2021 ஐபிஎல்லில் பெங்களூர் ஆடிய இரண்டு போட்டிகளிலும் அந்த அணிக்காக சிறப்பாக பவுலிங் செய்தது சிராஜ்தான்.

துல்லியமான லென்த், லைன், பல வெரியேஷன்கள் என்று சிராஜ் எதிர்பார்க்காத மாற்றத்தை தனது பவுலிங்கில் காட்டி வருகிறார். அதிலும் நேற்று போட்டியில் இவர் 144, 145 கிமீ வேகத்தில் அடுத்தடுத்து பவுலிங் செய்து அதிர வைத்தார். பும்ரா, ஷமியே 142 கிமீ வேகத்தை தாண்டாத நிலையில் சிராஜ் அசால்ட்டாக 145 கிமீ வேகத்தை தாண்டி பவுலிங் செய்கிறார்

நேற்று போட்டியில் முதல் ஓவரில் இவர் ரன் எதுவும் கொடுக்கவில்லை. அவர் வீசிய இரண்டாவது ஓவரில் வெறும் 2 ரன் மட்டுமே கொடுத்தார். இவரின் பந்தை தொட கூட முடியாமல் ஹைதராபாத் வீரர்கள் நேற்று திணறினார்கள். டெத் ஓவர்களில் சிராஜ் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் பவர் பிளேவில் சிராஜ்தான் பெஸ்ட் பவுலர். என்பது குறிப்பிடத்தக்கது.


No comments: