நடிகை நந்திதாவுக்கு கொரோனா தொற்று


தமிழில் அட்டகத்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நந்திதா.

எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, இடம்பொருள் ஏவல். புலி, கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

கொரோனா 2-வது அலையில் நந்திதாவுக்கு தற்போது தொற்று ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. இதையடுத்து என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என்று கூறியுள்ளார். 

இரு தினங்களுக்கு முன்பு விஜய்யின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னணி நடிகர், நடிகைகள் தொடர்ச்சியாக கொரோனாவில் சிக்குவது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments