எதிர்வரும் நாட்களில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் - இராணுவ தளபதி எச்சரிக்கை


இலங்கையில் எதிர்வரும் நாட்களில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சித்திரை புத்தாண்டு காலத்தில் மக்கள் சுகாதார விதிமுறைகளை ஒழுங்காக கடைப்பிடிக்காமையே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் நாட்டில் வார இறுதி நாட்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என அரசாங்கம் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வார இறுதியில் நாடு முடக்கப்படாது எனவும் அவர் அறிவித்துள்ளார்.

எனினும் பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறும்,சுகாதார விதிமுறைகளை கையாளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments: