அம்பாறை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் ; முப்படையினர் களத்தில்


இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலையின் தாக்கம் காரணமாக பல பாகங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துவரக்கூடியமையினை எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது.

அந்தவகையில் கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் ஊடாக மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் முப்படையினரும் இணைந்து கொரோனாவினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முகமாக மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கிய வண்ணம் உள்ளமையினை எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது.

அந்தவகையில் முப்படையினரும் இணைந்து இன்றைய தினம் அம்பாறை மாவட்டத்தில் வீதி வழியாக இருக்கின்ற மக்களுக்கு முகக் கவசம் அணியும் முக்கியத்துவம் தொடர்பில் விளக்கமளித்து வருவதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.

எனவே மக்கள் நாட்டின் தற்போதைய நிலைமையினைக் கருத்திற்கொண்டு தாங்கள் சுயமாக தனிமைப்படுத்தலில் இருப்பது மிக சிறப்பாக இருப்பதுடன் வீடுகளை விட்டு அநாவசியமான முறையில் வெளியேறுவதை தவிர்த்து சுகாதார துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி சுகாதாரத்துறை  மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments