இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள்..!


குளியாப்பிட்டி பொலிஸ் அதிகாரப் பிரிவு தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் கொவிட் -19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: