களத்திலேயே கோபமாக கத்திய தோனி.. நேற்று நடந்த சம்பவம்!


நேற்று டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி களத்தில் மிகவும் கோபமாக காணப்பட்டார். சென்னைக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி அதிரடியான பேட்டிங் மூலம் வெற்றி பெற்றது. கடந்த வருடமும் டெல்லிக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே இப்படித்தான் தோல்வி அடைந்தது. இந்த வருடமும் சிஎஸ்கே அணி டெல்லியிடம் மண்ணை கவ்வியுள்ளது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் நேற்று நன்றாக இருந்தாலும் பவுலிங் சொதப்பிய காரணத்தால் தோல்வி அடைந்தது.

நேற்று சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி முதல் பாதியில் கூலாக இருந்தாலும் இரண்டாவது பாதியில் தோனி பவர் பிளே முடிந்ததும் கோபமாக காணப்பபட்டார். சிஎஸ்கே அணி பவர் பிளேவிலேயே 60 ரன்களை வாரி வாங்கிவிட்டது. இரண்டு ஒப்பனர்களும் நல்ல பார்மிற்கு வந்துவிட்டனர்.

அதன்பின் ரன் செல்வதை கட்டுப்படுத்த முடியவில்லை. முக்கியமாக சாகர் நேற்று சரியாக ஸ்விங் செய்யவில்லை. அதேபோல் பிராவோ ஸ்லோ பாலை தவிர வேறு புதிதாக வீசவில்லை. இதுதான் சிஎஸ்கே அணிக்கு சிக்கலானது. இருவரும் ஒரே மாதிரி பந்துகளை மீண்டும் மீண்டும் வீசினார்கள்.

அதிலும் சாகர் சரியான லைனில் வீசவில்லை. ப்ரித்வி ஷாவிற்கு பவுன்சர்களை வீசவே இல்லை. முன்பெல்லாம் சாகர் நன்றாக ஸ்விங் செய்து ரன் செல்வதை கட்டுப்படுத்துவார். ஆனால் இன்று அப்படி இல்லை. அதேபோல் பிராவோ, ஷரத்துள் தாகூரும் சரியான லைனில் வீச முடியாமல் கஷ்டப்பட்டனர்.

7 ஓவருக்கு பின் இதனால் தோனி வெளிப்படையாக கோபம் அடைய தொடங்கினார். முகம் கடுகடுத்தபடியே இருந்தது. சாகர் தொடங்கி ரூத்துராஜ் வரை பல வீரர்களை திட்டிக்கொண்டே இருந்தார். தோனி இதற்கு முன்பெல்லாம் இப்படி கோபம் அடைந்தது இல்லை. ஆனால் நேற்று மிகவும் கோபமாக காணப்பட்டார்.

கடந்த சீசனில் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை சிஎஸ்கே இழந்தது. இதனால் வெற்றிபெற வேண்டும் என்ற துடிப்பில் தோனி இருக்கிறார். இதனால்தான் இன்று தோனி கடும் கோபத்துடன் காணப்பட்டார் என்று கூறப்படுகிறது. இந்த சீசனை அவர் பர்சனலாக தனக்கு முக்கியமாக சீசனாக தோனி கருதுகிறார்.

Post a Comment

0 Comments