இந்தியாவில் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு!


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,68,912 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.35 கோடியாக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 904 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 1,70,179 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 75,086 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 1.21 கோடி பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 10.45 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,21,56,529 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்க்கு 12,01,009 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: