நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 591 ஆக அதிகரிப்பு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 உயிரிழப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 591 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவரும், தனமல்வில பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் ஹெட்டிபொல பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


Post a Comment

0 Comments