இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 3.50 லட்சத்தை நெருங்கியது


இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து நான்காவது நாளாக 3 லட்சம் பேருக்கு மேல் பதிவாகி இருக்கிறது. 

அதே போல கொரோனாவால் பாதிக்கபட்டு இந்தியாவில் ஒரே நாளில் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து ஐந்தாவது நாளாக 2,000 பேருக்கு மேல் பதிவாகி இருக்கிறத

நேற்றைய தினம் ஒரே நாளில் இந்தியாவில் 3.49 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 2,760 பேர் மரணித்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது உலக அளவில், ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. 

இந்தியாவில் மட்டுமே நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். 

இரண்டாவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கூட, கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரே நாளில் 63,206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்தியா மற்றும் அமெரிக்கா தவிர வேறு எந்த நாட்டிலும் ஒரே நாளில் 50,000 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: