புதிதாக 3,000 பேர் தபால் திணைக்களத்திற்கு இணைப்பு


தபால் திணைக்களத்திற்கு புதிதாக 3,000 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மாகாண மட்டத்தில் இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கனிஷ்ட தபால் சேவைக்காக, நாளாந்த கொடுப்பனவின் அடிப்படையிலேயே புதிதாக ஊழியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நிலவும் வெற்றிடத்திற்கமைய அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தபால் விநியோகம், அலுவலக உதவியாளர்கள் போன்ற பணிகளுக்காக இவர்கள் தபால் திணைக்களத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: