260 சிறைக்கைதிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்


தற்போது நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளிலிருந்து 260 சிறைக்கைதிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு,கைதிகளை பார்வையிடுவதற்கு இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளுக்கு அழைத்து வரப்படும் புதிய கைதிகள் அனைவரும் வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர்,தொற்றாளர்களாக அடையாளம் காணப்படும் கைதிகள் சிகிச்சைகளுக்காக கந்தக்காடு சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்க நாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments