ஐபிஎல் 2021 தொடரிலிருந்து நடராஜன் விலகல்....!


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த தமிழகத்தை சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

இதனால் முதல் 2 ஆட்டத்தில் களம் இறங்கிய அவர் அதன் பிறகு விளையாடவில்லை. இந்த நிலையில் ஐ.பி.எல் எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் விலகி இருப்பதாக ஐதராபாத் அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

கடந்த ஆண்டு ‘யார்க்கர்’பந்து வீச்சில் கலக்கிய நடராஜனுக்கு இந்த சீசன் மிகுந்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.
No comments: