ஐபிஎல் போட்டி 2021 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் VS ராஜஸ்தான் ராயல்ஸ்


ஐபிஎல் போட்டியின் 16-ஆவது லீக் ஆட்டத்தில் இன்று 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை சந்திக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இரு அணிகளும் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில் பெங்களூரு அனைத்திலுமே வென்றுள்ளது. ராஜஸ்தான் ஒரு ஆட்டத்தில் வென்றிருக்கிறது. ராஜஸ்தான் அணியைப் பொருத்தவரை, ஒரு ஆட்டத்தில் பேட்டிங்கும் பவுலிங்கும் சிறப்பாக இருந்தும் ராஜஸ்தானுக்கு வெற்றி எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.

ராஜஸ்தான் கேப்டன் முதல் போட்டியில் சதமடித்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர், மனன் வோரா, ரியான் பராக், டேவிட் மில்லர் ஆகியோர் இன்னும் சிறப்பாக ஆடினால் அந்த அணி வலுவான ஸ்கோரை எட்டும். பந்துவீச்சை பொறுத்தவரை உனாட்கட், முஸ்தபிசூர் ரஹ்மான், கிறிஸ் மோரிஸ் என அணி பலமாக இருக்கிறது.

பெங்களூரு அணி இதுவரை இல்லாத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 4-ஆவது வெற்றிக்கான தீவிர முயற்சியுடன் அந்த அணி களம் காணும். பேட்டிங்கில் டி வில்லியா்ஸ், மேக்ஸ்வெல் ரன்களை குவிக்கின்றனர். தேவ்தப் படிக்கலும், கேப்டன் கோலியும் இன்னும் பெரியளவில் ரன்களை சேர்க்காதது அந்த அணிக்கு பின்னடைவு.

பவுலிங்கை பொறுத்தவரை ஹர்ஷல் படேல், சிராஜ். சஹால் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். இதனால் வெற்றி வேட்கைக்காக ராஜஸ்தானும், தொடர் வெற்றியை பெறுவதற்கான முயற்சியிலும் இன்றைய ஆட்டத்தில் களம் காண்கின்றன.

No comments: