கொரோனா தொற்றினால் வைத்தியர் ஒருவர் உயிரிழப்பு


கொரோனா தொற்றினால் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காலி கராபிட்டி வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

ராகம வைத்தியசாலையில் பணியாற்றி வந்த 32 வயதுடைய குறித்த வைத்தியர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அண்மையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த வைத்தியர் காலி கராபிட்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்த வைத்தியரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

No comments: