ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து - மூவர் படுகாயம்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியின் இன்ஜஸ்ரீ பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் இன்று (01) 1.00 மணியவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அவிசாவளை பகுதியில் இருந்து டிக்கோயா போடைஸ் தோட்ட பகுதியில் உள்ள மரண வீடு ஒன்றுக்கு வந்தவர்கள் மது அருந்தி விட்டு ஒரே முச்சக்கர வண்டியில் ஆறு பேர் பயணித்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதில் பயணித்த ஆறு பேரில் மூன்று பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சம்பவ இடத்திற்கு வரைவழைக்கபட்டு காயமடைந்தவர்களை  டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக நோர்வூட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: