பொகவந்தலாவ வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கு பூட்டு

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ


பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் இரண்டாம் இலக்க வாட்டில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த நோயாளர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் இருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது குறித்த நோயாளருக்கு நேற்று மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு காலவரையின்றி மூடப்பட்டுள்ளதோடு வைத்தியசாலையில் பணிபுரிந்து வருகின்ற இரண்டு வைத்தியர்கள், 03 தாதியர்கள், 06 உதவியாளர்கள் உட்பட 11 பேர் 14நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இரண்டாம் இலக்க வாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சில நோயாளர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், உடல் நிலை சீராக உள்ளவர்களை வீட்டிற்கு அனுப்பி அவர்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,வைத்தியசாலையின் நடவடிக்கைகளில் அவசரசிகிச்சைப் பிரிவு மாத்திரம் இயங்குமெனவும் நோயாளர்கள் அனுமதிக்கும் நடவடிக்கை எதுவும் இடம்பெறாது எனவும்  வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

No comments: