நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்


கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 07 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி,வத்தளை பகுதியைச் சேர்ந்த 75 வயதான பெண் ஒருவர் வட கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, சிறுநீராக நோய் மற்றும் இரத்தம் விஷமானதால் ஏற்பட்ட அதிர்ச்சி நிலைமை காரணமாக 2021 ஜனவரி 31ம் திகதி உயிரிழந்துள்ளார்.

நுகேகொட பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒரு வர் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் புற்று நோய் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

கொழும்பு - 02 பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று மற்றும் மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஆண் ஒருவர் இரத்த விஷமானமையால் பல உறுப்புக்கள் செயலிழந்தமை, சுவாச அழற்சி, கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் சிறுநீரக நோய் காரணமாக 2021 ஜனவரி 30ம் திகதி வீட்டிலே உயிரிழந்துள்ளார்.

மடவல பகுதியைச் சேர்ந்த 73 வயதான பெண் ஒருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் மாரடைப்பு காரணமாக  நேற்று உயிரிழந்துள்ளார்.

கெலிஓயா பகுதியைச் சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, இரத்த விஷமானது, நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுறுதியான நிலையில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 323 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: