நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு


நாட்டில் மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 390ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவரும், ஹபராதுவை பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரும், நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவரும், நீர்க்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரும், கண்டி பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் நாராங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

No comments: