இலங்கைப் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம்


தற்போது வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பணியாளர்களை துரிதமாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டத்தை தொழில் அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வந்த பின்னர் தனிமைப்படுத்துவதற்கான நிலையங்களில் போதியளவு இடவசதி இல்லாமையினால் அவர்களை அழைத்து வருவதில் காலதாமதம் ஏற்படுவதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நிதியின் ஊடாக 9 மாகாணங்களிலும் 9 தனிமைப்படுத்தும் நிலையங்களை ஸ்தாபித்து வெளிநாட்டில் உள்ள இலங்கைப் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


No comments: