நாடு திரும்பிய இலங்கையர்கள்


தொழில் நிமித்தம் சீஷெல்ஸ் நாட்டிற்கு சென்று, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு திரும்பி முடியாமல் இருந்த 164 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும், ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்– 708 விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வந்தடைந்துள்ளனர்.

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரம் அரசாங்கத்தின் விசேட வேலைத் திட்டத்திற்கமைய இவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த அனைவரும் முப்படையினரால் நடாத்திச்செல்லப்படும் கொரோனா தடுப்பு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: